உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மறைமலை நகரில்  18 அடி உயர அய்யப்பன்  சிலை இன்று பிரதிஷ்டை

மறைமலை நகரில்  18 அடி உயர அய்யப்பன்  சிலை இன்று பிரதிஷ்டை

கூடுவாஞ்சேரி, : மறைமலை நகரில், அய்யப்பன் கோவிலில், 18 அடி உயரமுள்ள அய்யப்பன் சிலை விஸ்வரூப தரிசனத்திற்கு இன்று பிரதிஷ்டை செய்யப்படுகிறது.இந்த கோவிலை மறைமலைநகர் அய்யப்ப பக்த ஜன சபா அறக்கட்டளை சார்பில் நிர்வாகிகள் பராமரித்து வருகின்றனர். இந்த கோவில் 1995ல், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மற்றும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இணைந்து திருப்பணியை நடத்தி வைத்தனர்.இந்த கோவிலில் அய்யப்ப சுவாமி விஸ்வரூப சிலை நிறுவப்பட்டுள்ளது. பீடம் 12 அடியுடன், தாமரைப்பூ அகலம் 10 அடி, உயரம் ஆறடி, இதற்கு மேல் 18 அடி உயர அய்யப்பன், விஸ்வரூப தரிசனத்திற்கு இன்று, காலை 9:00 மணி முதல் 10.30 மணிக்குள் பிரதிஷ்டை வைபவம் நடைபெற உள்ளது.அதை முன்னிட்டு, நேற்று மாலை 4:00 மணிக்கு, மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. இரவு 7.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, தீபாராதனை நடைபெற்றது.இன்று, காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் 18 அடி உயர அய்யப்பன் சிலை பிரதிஷ்டை செய்து கலச தீர்த்த அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து 108 குடம் பாலாபிஷேகமும், 108 குடம் பன்னீர் அபிஷேகத்துடன் விஸ்வரூப தரிசன அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை