உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 10ம் வகுப்பு மாணவன் மாயம்

10ம் வகுப்பு மாணவன் மாயம்

மதுராந்தகம், ஜூலை 5– மதுராந்தகத்தில் உள்ள அரசு சமூகநீதி விடுதியில் தங்கி பயின்று வந்த 10ம் வகுப்பு மாணவன் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை, சோழிங்கநல்லுார் அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் யூஜின் குமார், 32. இவரது மகன் லோகேஷ், 15. இவர், மதுராந்தகத்தில் உள்ள சி.எஸ்.சி., உயர்நிலைப் பள்ளியில் 10 வகுப்பு பயின்று வருகிறார். இவர், அதே பகுதியில் இயங்கி வரும் அரசு சமூக நீதி மாணவர் விடுதியில், நான்கு ஆண்டுகளாக, தங்கி பயில்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவன், மாலை விடுதிக்கு திரும்பவில்லை. இதுகுறித்து விடுதி காப்பாளர் பாபு, ஆசிரியர்களிடம் விசாரித்த போது பள்ளிக்கு வரவில்லை என கூறியுள்ளனர். பின் மாணவவனின் தந்தை யூஜின் குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மாணவனின் தந்தை அளித்த புகாரையடுத்து, மதுராந்தகம் போலீசார் மாயமான பள்ளி மாணவனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !