உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஏரிகாத்த ராமர் கோவில் தேருக்கு 2 டன் எடையுள்ள வடம் வருகை

ஏரிகாத்த ராமர் கோவில் தேருக்கு 2 டன் எடையுள்ள வடம் வருகை

மதுராந்தகம், மதுராந்தகம் நகரில் வைணவ திருத்தலங்களில் ஒன்றான புகழ் பெற்ற ஏரி காத்த ராமர் என அழைக்கப்படும்,கோதண்டராமர் திருக்கோவில் உள்ளது.ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ்இக்கோவில் செயல்பட்டு வருகிறது.இத்திருத்தலத்தில்மூலவர் சன்னிதியில் ராமர் சீதையை கைப்பற்றி திருமணக்கோலத்தில் அமைந்திருப்பது சிறப்பு பெற்ற ஸ்தலமாகும்.ஸ்ரீ ராமானுஜருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்த இத்தலத்திற்கு த்வியம் விளைந்த திருப்பதி என மற்றொரு பெயரும் உண்டு.பல்வேறு சிறப்புகள் பெற்ற மதுராந்தகம் ஏரி காத்த கோதண்டராமர் கோவிலின் தேர்த்திருவிழா மிக விமரிசையாக நடைபெற்று வந்தது.இந்தாண்டு, கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, கடந்த ஆண்டு, பாலாலயம்செய்யப்பட்டு, கண்ணாடி அறைக்குள் சாமி வைக்கப்பட்டுள்ளது.தற்போது, உபயதாரர்கள் நிதி வாயிலாக, தேர் நிலை மற்றும் பெரிய தேர்75 லட்சம் ரூபாய் மதிப்பில்அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது.தேரின் அடிபீடம் 15 அடி மற்றும் விஸ்தார மேல்மட்டம் சேர்த்து 52 அடியில் தேர், முழுதும் மரத்தால் வடிவமைக்கப்பட்டு வருகிறது.தேர் மற்றும் கோவிலில் புனரமைப்பு பணி முடிந்து, வரும், மே மாதம் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாக, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில், மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் பெரிய தேரின் வடம் எனும் கயிறுஉபயதாரர் நிதியின் வாயிலாக, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில்,தென்னங்கயிற்றால் தயாரிக்கப்பட்ட, 2 டன் எடை கொண்ட, 200 அடி நீளம் வடம் தயார் செய்து மதுராந்தகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.நேற்று, வடத்திற்குதீப ஆராதனை காட்டி பக்தர்கள்வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !