உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இயங்காத வெங்கப்பாக்கம் சிக்னல் விபத்து அபாயத்தில் பயணியர்

இயங்காத வெங்கப்பாக்கம் சிக்னல் விபத்து அபாயத்தில் பயணியர்

புதுப்பட்டினம்,வெங்கப்பாக்கம் சிக்னல் ஒளிராததால், வாகனங்கள் விபத்து அபாயத்துடன் தாறுமாறாக கடக்கின்றன. கல்பாக்கம் அடுத்த, வெங்கப்பாக்கம் பகுதியில், புதுச்சேரி சாலையில், சதுரங்கப்பட்டினம் - திருக்கழுக்குன்றம் சாலை குறுக்கிடுகிறது. புதுச்சேரி சாலையில், 24 மணி நேரமும் வாகனங்கள் கடக்கின்றன. சதுரங்கப்பட்டினம் - திருக்கழுக்குன்றம் சாலையில், கல்பாக்கம் அணுசக்தி தொழில் வளாகம், கல்பாக்கம், அணுபுரம் ஆகிய நகரியங்கள், சதுரங்கப்பட்டினம், சுற்றுபுற பகுதிகள் வாகனங்கள் கடக்கின்றன.குறிப்பாக, சதுரங்கப்பட்டினம் சாலையில், காலை, மாலையில், போக்குவரத்து அதிகம். சந்திப்பு பகுதியில், வாகனங்கள் தாறுமாறாகவும், போக்குவரத்து விதிகளை புறக்கணித்தும் குறுக்கில் கடக்கின்றன. இதனால் விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்க, சதுரங்கப்பட்டினம் போலீசார், தானியங்கி சிக்னலை, சில மாதங்களுக்கு முன் அமைத்தனர். ஆனால் சிக்னல் இயங்காமலே உள்ளது. விபத்தை தவிர்க்க, சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டுவர, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை