உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுதல் வங்கிகள் ஏற்படுத்த கடப்பாக்கத்தில் எதிர்பார்ப்பு

கூடுதல் வங்கிகள் ஏற்படுத்த கடப்பாக்கத்தில் எதிர்பார்ப்பு

செய்யூர், செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் பகுதியில், இந்தியன் வங்கி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.ஆலம்பரைக்குப்பம், விளம்பூர், கப்பிவாக்கம், வேம்பனுார், கெங்கதேவன்குப்பம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு இதுவே பிரதான வங்கியாகும்.இந்த வங்கியில், 10,000க்கும் மேற்பட்டோர் கணக்கு வைத்துள்ளனர். முதியோர் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்றோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை என, அனைத்து விதமான அரசு சார்ந்த நலத்திட்ட உதவி தொகைகளை வங்கி வாயிலாகவே அப்பகுதிவாசிகள் பெற்று வருகின்றனர்.கடப்பாக்கம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட அங்காடி கடைகள் உள்ளன. பெரும்பாலான வியாபாரிகள், இந்த வங்கியில் பணம் பரிவர்த்தனை செய்கின்றனர்.தினசரி நுாற்றுக்கணக்கானோர் பண பரிவர்த்தனைக்காக வங்கிக்கு வந்து செல்கின்றனர். தொடர் விடுமுறைக்குப் பின், வங்கி செயல்படும் நாட்களில், அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.மேலும், பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் கடப்பாக்கம் பகுதியில் கூடுதலாக வங்கி துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ