மேலும் செய்திகள்
காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
08-Sep-2024
செங்கல்பட்டு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, மக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.விநாயகர் கோவில் மற்றும் வீடுகளில், விநாயகர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் காவல் துணை கண்காணிப்பாளர்கள் அலுவலக கட்டுப்பாட்டில், 20 காவல் நிலையங்கள் உள்ளன.இங்கு, 535 விநாயகர் சிலைகள் வைக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில், தன்னார்வலர்கள் இரண்டு பேர், 24 மணி நேரமும், சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 950 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். செய்யூர்
செய்யூர் மற்றும் மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், பவுஞ்சூர், கூவத்துார், கடப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 150க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.இந்த விநாயகர் சிலைகள், நாளை செய்யூர் பகுதியில் உள்ள கடப்பாக்கம், கடலுார்குப்பம், வடபட்டினம், தழுதாளிகுப்பம் உள்ளிட்ட கடற்கரைகளில் கரைக்கப்பட உள்ளது. கூடுவாஞ்சேரி
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவிலில், நேற்று காலை கோ பூஜையுடன், அகோர கணநாத ஹோமம் நடைபெற்றது.கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், நந்திவரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
திருப்போரூர்
திருப்போரூரில் உள்ள வேம்படி விநாயகர், தங்க பிள்ளையார், வினை தீர்த்த விநாயகர், கங்கை விநாயகர், செம்பாக்கத்தில் உள்ள 32 விநாயகர் கோவில்கள், காலவாக்கம் ஸ்ரீ வல்லபாய் விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேகம் சுவாமி புறப்பாடு நடந்தது. மாமல்லபுரம்
மாமல்லபுரத்தில், தொல்லியல் வளாகத்தில் உள்ள கணேச ரதத்தில் வீற்றுள்ள விநாயகருக்கு, தொல்லியல் துறையினர் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து வழிபட்டனர். மல்லிகேஸ்வரர் கோவிலில், சிறப்பு வழிபாடு நடபெற்றது.திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மற்றும் விநாயகர் கோவில்களிலும் சதுர்த்தி உற்சவம் நடந்தது. - நமது நிருபர்கள் குழு -
08-Sep-2024