7,000 கிலோ போதை பொருட்கள் தென்மேல்பாக்கத்தில் தீயிலிட்டு அழிப்பு
மறைமலை:தமிழகம் முழுதும் இருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் போதை பொருட்களை, தென்மேல்பாக்கத்தில் போலீசார் தீயிலிட்டு அளித்தனர். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கத்தில், ஜி.ஜே., மல்டிகிலேவ் என்ற தனியார் மருத்துவ கழிவுகள் எரிக்கும் நிறுவனத்தில், போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், நீதிமன்ற உத்தரவுக்குப் பின் எரிக்கப்படுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுதும் போதைப்பொருள் பணியகம் சார்பில் கைப்பற்றப்பட்ட, 2,000 கிலோ போதை பொருட் கள். நுண்ணறிவு பிரிவு போலீசாரால் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா சாக்லெட், அபின், மெத் ஆம்பெட்டமைன் உள்ளிட்ட உயர் ரக போதை பொருட்கள் 5,000 கிலோ என, மொத்தம் 7,000 கிலோ போதை பொருட்கள், தென்மேல்பாக்கத்தில் உள்ள மருத்துவ கழிவுகள் எரிக்கும் நிறுவனத்தில், தீயிலிட்டு அழிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் எஸ்.பி., அரவிந்தன் உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.