எச்சரிக்கை பலகை இல்லாததால் போந்துாரில் விபத்து அபாயம்
சித்தாமூர்: போந்துார் சாலை சந்திப்பில் எச்சரிக்கை பலகை இல்லாமல் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சித்தாமூர் அருகே போந்துார் கிராமத்தில் மதுராந்தகம்-சூணாம்பேடு செல்லும் நெடுஞ்சாலையில், அச்சிறுப்பாக்கம் செல்லும் சாலையின் முக்கிய சந்திப்பு உள்ளது. இப்பகுதில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் ஒன்றாகும். இதில் தினசரி இருசக்கர வாகனம், கார், பேருந்து மற்றும் லாரி என நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. சாலை சந்திப்பு இருப்பது குறித்து சாலை ஓரத்தில் எச்சரிக்கை பலகை இல்லாமல் உள்ளதால், இந்த பகுதிக்கு புதிதாக வரும் வாகன ஓட்டிகள் அச்சிறுப்பாக்கத்தில் இருந்து சூணாம்பேடு செல்லும் வாகனங்கள் மற்றும் மதுராந்தகத்தில் இருந்து அச்சிறுப்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள் சாலை வளைவுப் பகுதி இருப்பது தெரியாமல் கட்டுபாட்டை இழந்து எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. ஆகையால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, போந்துார் சாலை சந்திப்பில் எச்சரிக்கை பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.