அடிப்படை வசதியில்லாத அங்கன்வாடி மையம்
பவுஞ்சூர்:நெல்வாய் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையம் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளன. பவுஞ்சூர் அருகே நெல்வாய் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் உள்ளது. அங்கு, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். அங்கன்வாடி மையத்தின் மைதானத்தை சுற்றி வாகனங்கள், டிராக்டர்கள் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், ஆடு, மாடுகள் அங்கன்வாடி மையத்தின் முன் உள்ள மைதானத்தில், சாணம் போட்டுச் செல்கின்றன. நாய்கள் மைதானத்திலேயே சுற்றித் திரிகின்றன. இதனால், குழந்தைகளை விளையாட அனுமதிப் பதில்லை. குழந்தைகள் மலம், சிறுநீர் கழிப்பதற்கு கழிப்பறை வசதியில்லை. இதனால், பல சிரமங்களுக்கு மத்தியில் குழந்தைகளை வெளியில் கூட்டிச் செல்ல வேண்டியுள்ளது. மேலும் அங்கன்வாடி மையம் விரிசலடைந்தும், மழைகாலங்களில் அங்கன்வாடியின் ஜன்னல் பகுதிகளில் இருந்து மழைநீர் ஒழுகியும் வருகிறது. பழைய அங்கன்வாடி மைய கட்டடத்தை இடித்து விட்டு, கழிப்பறை வசதி, அங்கன்வாடி மையத்தின் மைதானத்தை சுற்றி சுற்று சுவர் கட்டுவதற்கு, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.