உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சட்டசபை தேர்தல் எதிரொலி: குற்றச் சம்பவ வழக்கு தவிர்ப்பு?

 சட்டசபை தேர்தல் எதிரொலி: குற்றச் சம்பவ வழக்கு தவிர்ப்பு?

செங்கல்பட்டு: சட்டசபை தேர்தல் காரணமாக, போதை விற்பனை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் குறித்து, போலீசார் வழக்கு பதியாமல் தவிர்ப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளாக, தி.மு.க., ஆட்சி செய்தது. ஆட்சி நிர்வாக குளறுபடியால், மாநிலத்தில் போதை பெருக்கம், பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, கட்டுக்கடங்காத வன்முறை கொலைகள், மணல் உள்ளிட்ட கனிமவளங்கள் கொள்ளை, கலாசார சீர்கேடு என, தமிழகம் சீரழிந்து வந்ததாக, எதிர்கட்சியினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தனர். இத்தகைய சம்பவங்கள் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவர். சட்டசபை கூட்டத்தின்போது, குற்றச்சம்பவமே நடந்தாலும், வழக்கு பதியாமல் தவிர்ப்பர் அல்லது தாமதமாக பதிவர். தற்போது, தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்ட போலீசார், கொள்ளை, போதை, மணல் திருட்டு போன்ற குற்றங்களுக்கு வழக்குபதிவை தவிர்க்கின்றனர். விபத்தில் இறப்பு, தற்கொலை போன்ற சம்பவ வழக்கு விபரங்களையே, பத்திரிகையாளரிடம் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை