மேலும் செய்திகள்
உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம்
24-Jun-2025
உழவரை தேடி வேளாண் திட்ட சிறப்பு முகாம்
24-Jun-2025
மதுராந்தகம்:தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர் சங்க மாநில செயற்குழு மற்றும் மாவட்ட பொதுக்குழு கூட்டம், மதுராந்தகம் வேளாண்மை உழவர் நலத்துறை கட்டடத்தில் நேற்று முன்தினம் நடந்தது.இந்நிகழ்வில், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் பாலகுமார் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் முருகன் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலர் சுரேஷ், மாநில தணிக்கையாளர் பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:தொழில்நுட்ப அலுவலர்களான உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கு, நிர்வாக காரணங்களைக் கூறி பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டதை உடனடியாக ரத்து செய்து, அந்தந்த மாவட்டத்திலேயே பணி வழங்க வேண்டும்.அரசு பணி நாட்களைத் தவிர, அத்தியாவசிய பணிகள் இல்லாத சூழலிலும் பிற துறைகளின் பணிகளை புகுத்துவது தவிர்க்க வேண்டும்.சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும், அலுவலக நேரம் முடிந்தும் வீடியோ கான்பரன்ஸ் கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும்.விவசாயிகளுக்கு தனித்துவ பதிவு எண் பதிவு செய்தல் மற்றும் பயிர் எண் கணக்கீடு பணிகள் மேற்கொள்ள, படித்த இளைஞர்கள் மற்றும் சுய உதவி குழுக்களை அமர்த்தி பணி செய்ய வேண்டும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கூட்டத்தில், செங்கல்பட்டு மாவட்ட உறுப்பினர்கள் 35 பேர் பங்கேற்றனர்.
24-Jun-2025
24-Jun-2025