உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மரத்திலிருந்து விழுந்த சிறுவன் கையில் கம்பி குத்தி படுகாயம்

மரத்திலிருந்து விழுந்த சிறுவன் கையில் கம்பி குத்தி படுகாயம்

சூணாம்பேடு:காவனுாரில், தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்ததில், வலது கையில் இரும்பு கம்பி பாய்ந்து, சிறுவன் படுகாயமடைந்தான்.செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடு அருகே காவனுார் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் ஹரிஷ், 15.நேற்று மதியம், 12:30 மணியளவில் சிறுவன், தன் வீட்டின் அருகே உள்ள குட்டி என்பவருக்குச் சொந்தமான தென்னை மரத்தில், தேங்காய் பறிக்க ஏறியுள்ளான்.அப்போது தவறி, மரத்திலிருந்து கீழே விழுந்துள்ளான். இதில், அருகே வீடு கட்டுமானப் பணி நடந்து வந்த நிலையில், அங்கிருந்த இரும்பு கம்பி சிறுவனின் வலது கையில் பாய்ந்தது.பலத்த காயமடைந்த சிறுவனை அருகே இருந்தோர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை