உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குழந்தைகள் வளர்ப்பு திட்டத்திற்கு அழைப்பு

குழந்தைகள் வளர்ப்பு திட்டத்திற்கு அழைப்பு

செங்கல்பட்டு, ஆக. 26– ‘குழந்தை வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தில், குழந்தைகள் பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்’ என செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து, கலெக்டர் வீரப்பன் வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை உள்ளன. இத்துறையின் கீழ், பெற்றோரை இழந்து தங்கி கல்வி பயின்று வரும் 6 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளை வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தில் வளர்க்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து முழுமையான விபரங்களை அறிந்து, குழந்தைகளை வளர்க்க விரும்புவோர், செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் அணுகலாம். மேலும் விபரங்களுக்கு 63826 13182 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை