உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காட்டாங்கொளத்துாரில் தீப்பற்றி எரிந்த கார்

காட்டாங்கொளத்துாரில் தீப்பற்றி எரிந்த கார்

மறைமலை நகர்: காட்டாங்கொளத்துார் ஜி.எஸ்.டி., சாலையில், நள்ளிரவில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல் குமார், 35. நேற்று முன்தினம் இரவு, குடும்பத்துடன் 'டாடா ஜெஸ்ட்' காரில் சென்றார் . ஜி.எஸ்.டி., சாலையில், காட்டாங்கொளத்துார் சிவானந்தா குருகுலம் அருகில் சென்ற போது, காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்துள்ளது. உடனே, அனைவரும் காரில் இருந்து வெளியே இறங்கிய நிலையில், கார் தீப்பற்றி மளமளவென எரியத் துவங்கியுள்ளது. சக வாகன ஓட்டிகள், மறைமலை நகர் தீயணைப்பு துறை மற்றும் மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனாலும், கார் முழுதும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !