மேலும் செய்திகள்
நிலம் தொடர்பாக தகராறு 17 பேர் மீது வழக்கு பதிவு
19-Jun-2025
திருப்போரூர்:திருப்போரூர் அருகே, பால் வேனுக்கு வழி விடாத தகராறில் இரு தரப்பு மோதல் ஏற்பட்டு, ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.திருப்போரூர் அடுத்த வளவந்தாங்கல் கிராமத்தில், கடந்த 27ம் தேதி சுபநிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது.இந்த விழாவிற்கு உறவினர்கள் ஒரு வேனில் வந்து இறங்கியபோது. அந்த வழியாக பால் வேன் வந்து, வழியின்றி நின்றதாக தெரிகிறது. பின், விழாவுக்கு வந்த அனைவரும் வேனில் இருந்து இறங்கியவுடன் வழிவிடப்பட்டு, பால் வேன் சென்றுள்ளது. இதற்கிடையில் பால் வேன் ஓட்டுநர், அப்பகுதியில் பால் சேகரித்து அனுப்பும் கோபு என்பவருக்கு மொபைல்போனில், பால்வண்டி செல்ல வழி விடவில்லை எனக் கூறியதாக தெரிகிறது.அங்கு சென்ற கோபு, சுபநிகழ்ச்சிக்கு வந்தவர்களை அவதுாறாக பேசியதால், தகராறு ஏற்பட்டு அவர்கள் கோபுவை தாக்கியதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த 29ம் தேதி இரவு, எதிர் தரப்பில் வளவந்தாங்கல் சர்ச் தெருவைச் சேர்ந்த முனியாண்டி, 38, என்பவர், அங்குள்ள பள்ளிக்கூடம் அருகே இருந்துள்ளார்.அங்கு பைக்கில் சென்று கோபு உள்ளிட்ட ஆறு பேர், முனியாண்டியை தாக்கிவிட்டு தப்பினர்.இதையடுத்து முனியாண்டி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுகுறித்து முனியாண்டி, மானாமதி போலீசில் புகார் அளித்தார்.விசாரித்த போலீசார், நேற்று முன்தினம் கோபு,46, மீது வன்கொடுமை உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு, அவரை கைது செய்தனர்.மேலும், தலைமறைவான சிலரை தேடி வருகின்றனர்.
19-Jun-2025