உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / லாட்டரி சீட்டு விற்ற மூவர் மீது வழக்கு

லாட்டரி சீட்டு விற்ற மூவர் மீது வழக்கு

செங்கல்பட்டு, செங்கல்பட்டு நகர பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன.இதையடுத்து நேற்று காலை செங்கல்பட்டு மார்க்கெட் சாலையில் உள்ள பெட்டிக் கடைக்கு அருகில் போலீசார் நடத்திய சோதனையில் அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு இருந்த செங்கல்பட்டு பெரிய நத்தம் பகுதியை சேர்ந்த கணேசன், 53. அருள்,47.குமார், 50 உள்ளிட்ட மூவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணைக்கு பின் மூவர் மீதும் வழக்கு பதிந்து அவர்களிடமிருந்து 41,500 ரூபாய் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி