உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஊரப்பாக்கத்தில் சிமென்ட் சாலை 15 ஆண்டு போராட்டத்திற்கு விடிவு

ஊரப்பாக்கத்தில் சிமென்ட் சாலை 15 ஆண்டு போராட்டத்திற்கு விடிவு

ஊரப்பாக்கம், நம் நாளிதழ் செய்தி எதிரொலியால், ஊரப்பாக்கம் மணிமேகலை தெருவில், 15 ஆண்டுகளுக்குப் பின் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, 10வது வார்டுக்கு உட்பட்ட மணிமேகலை தெருவில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இத்தெருவில், 120 மீட்டர் துாரமுள்ள சாலை கற்கள் நிரம்பி, நடப்பதற்கே லாயக்கற்ற நிலையில் இருந்தது.சாலை வசதி கோரி ஊராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர், முதல்வர் தனிப்பிரிவு உள்ளிட்டவற்றில் புகார் அளித்தும், கடந்த 15 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படவில்லை.இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானது.இதையடுத்து, 7.20 லட்சம் ரூபாய் செலவில், மணிமேகலை தெருவில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், சாலை அமைக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும், நம் நாளிதழுக்கும் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி