உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சென்னை சங்கமம் 13ல் துவக்கம்

சென்னை சங்கமம் 13ல் துவக்கம்

சென்னை, சென்னையில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, கிண்டி கத்திப்பாரா வளாகம், எழும்பூர் அருங்காட்சியகம், ராயபுரம் ராபின்சன் பூங்கா, அண்ணாநகர் டவர் பூங்கா, கொளத்துார் மாநகராட்சி திடல் உட்பட, 18 இடங்களில், சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது.இது தொடர்பாக, துாத்துக்குடி எம்.பி., கனிமொழி தலைமையில், ஒருங்கிணைப்பு துறைகளுடன் நேற்று, தலைமை செயலகத்தில் ஆலோசனை நடந்தது.வரும் 13ம் தேதி, கீழ்ப்பாக்கம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் திடலில், முதல்வர் ஸ்டாலின், கலை நிகழ்ச்சியை துவங்கி வைக்க உள்ளார்.இந்த கலை நிகழ்ச்சிகள், வரும் 14 முதல் 17ம் தேதி வரை, மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணிவரை நடக்கவுள்ளது.இதில், 1,500 கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த விழா நடக்கும் நாட்களில், பாரம்பரிய உணவு திருவிழாவும் நடக்கவுள்ளது என, தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ