உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தொடர் செயின் பறிப்பு சென்னை இளைஞர் கைது

தொடர் செயின் பறிப்பு சென்னை இளைஞர் கைது

சூணாம்பேடு :சூணாம்பேடு அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோமதி, 45.இவர், கடந்த 23ம் தேதி திண்டிவனம் சாலையில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், இவர் கழுத்தில் இருந்த 2 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பினார்.அதே நாளில், சித்தாமூர் அடுத்த நல்லாமூர் பகுதியில் சாலையோரம் நடந்த சென்ற பெண்ணிடம், 1.5 சவரன் நகையை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பினார்.தொடர் செயின் பறிப்பு குறித்து, சூணாம்பேடு மற்றும் சித்தாமூர் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து, சித்தாமூர், சூணாம்பேடு போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து, தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை, அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் வாயிலாக தேடி வந்தனர்.நேற்று முன்தினம் இரவு அந்த நபர், சூணாம்பேடு அடுத்த பள்ளம்பாக்கம் பகுதியில் செல்வது தெரிந்தது.சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபரை மடக்க முயற்சி செய்த போது, போலீசிடம் சிக்காமல் இருக்க அதிவேகமாக சென்றார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி, அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.விசாரணையில் அவர், சென்னை நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய், 21, என்பதும், சாலையோரத்தில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து, தொடர் செயின் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.பின், அவரிடம் இருந்து 3 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்து, நேற்று செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை