உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பயணியர் நிழற்குடை பணி துவக்கம்

பயணியர் நிழற்குடை பணி துவக்கம்

அச்சிறுபாக்கம்:அனந்தமங்கலம் அகத்தீஸ்வரர் கோவில் அருகே, புதிதாக பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன. அச்சிறுபாக்கம் ஒன்றியம் அனந்தமங்கலம் ஊராட்சியில் இருந்து திண்டிவனம், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகளில் செல்லும் பயணியர், இங்கு நிழற்குடையின்றி சிரமப்பட்டு வந்தனர். நிழற்குடை அமைக்க கோரி, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்தது. இதையடுத்து, அனந்தமங்கலம் அகத்தீஸ்வரர் கோவில் அருகே, மாவட்ட கவுன்சிலர் நிதி 8 லட்சம் ரூபாயில், பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை