உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாணவர்கள் உயர்கல்விக்கு வழிகாட்ட கட்டுப்பாட்டு அறை துவக்கம்

மாணவர்கள் உயர்கல்விக்கு வழிகாட்ட கட்டுப்பாட்டு அறை துவக்கம்

செங்கல்பட்டு:பிளஸ் 2 மாணவர்கள் உயர் கல்வி படிக்க வழிகாட்ட, மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில், 2024 - 25ம் கல்வியாண்டில், பிளஸ் -2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி சேர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தோல்வியுற்ற மாணவர்களை சிறப்பு துணைத் தேர்வு எழுத வைத்து, தேர்ச்சி பெற வைப்பதற்கும் மற்றும் மாணவர்களின் கல்வி நலன் கருதி, அவர்கள் வைக்கும் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கவும், கலெக்டர் தலைமையில், சிறப்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.இதற்காக, மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. உயர் கல்வி சார்ந்த உதவி மற்றும் சந்தேகங்களுக்கு, மாவட்ட அளவிலான உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 044-2742 7412-2742 7414 ஆகியவற்றின் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை