ஆபத்தான சுவிட்ச் பாக்ஸ்
முள்ளிக்கொளத்துார் ஊராட்சியில், 4வது வார்டில் பெரியார் தெரு, கங்கையம்மன் கோவில் தெருக்கள் உள்ளன. இங்கு, 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இத்தெருக்களின் சந்திப்பில் மின்கம்பம் உள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள மின் பெட்டிக்கு கதவு இல்லாமல், ஆபத்தான முறையில் திறந்து உள்ளது. மேலும், 'சுவிட்ச்' பெட்டி மிகவும் தாழ்வாக மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ளதால், அங்கு விளையாடும் குழந்தைகள் தவறுதலாக மின் சுவிட்ச் பெட்டியில் கை வைத்தால், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மின்வாரியத் துறையினர் ஆய்வு செய்து, மின் சுவிட்ச் பெட்டிக்கு கதவு பொருத்தி, சற்று உயர்த்தி பொருத்த வேண்டும். - கதிர்வேல் கார்த்திக், முள்ளிக்கொளத்துார்.