உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகத்தில் இறந்த நிலையில் காரில் ஆண் சடலம் மீட்பு

மதுராந்தகத்தில் இறந்த நிலையில் காரில் ஆண் சடலம் மீட்பு

மதுராந்தகம்:மதுராந்தகத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரில், இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் கிளியாற்று பாலம் அருகே உள்ள காலி இடத்தில்,'கியா' கார் ஒன்று, நேற்று முன்தினம் மாலை முதல், ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.இந்த காருக்குள், ஒருவர் மயங்கிய நிலையில் இருப்பதாக, அவ்வழியாக சென்ற பகுதிவாசிகள், மதுராந்தகம் போலீசாருக்கு நேற்று தகவல் கூறினர்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது, கார் கதவுகள் மூடப்பட்டிருந்தன.கார் ஓட்டுநர், அவரது இருக்கையில் சாய்ந்தபடி, இறந்த நிலையில் இருந்துள்ளார்.கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின், போலீசார் கார் கண்ணாடியை உடைத்து, ஓட்டுநர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.காரில், மதுவுடன் தண்ணீர் கலந்த தண்ணீர் பாட்டிலும் இருந்துள்ளது.கார் பதிவு எண்ணை வைத்து விசாரித்த போது, அவர் மேல்மருவத்துார் அருகே உள்ள அகிலி கிராமத்தைச் சேர்ந்த அமல்ராஜ், 42, என்பதும், அச்சிறுபாக்கம் அருகே உத்தமநல்லுார் சர்ச்சில், பாதிரியாராக இருந்து வந்ததும் தெரிந்தது.அவர், அச்சிறுபாக்கத்தில் மது வாங்கி அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சென்னை நோக்கி புறப்பட்டிருக்கலாம்.பின், நிதானம் இல்லாததால், கிளியாற்று பாலம் அருகே உள்ள காலி இடத்தில் காரை நிறுத்தி விட்டு, கதவுகளை மூடிக் கொண்டு துாங்கி இருக்கலாம்.அப்போது, மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ