உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரூ.52.71 லட்சத்தில் 3 குடிநீர் கிணறு அமைக்க முடிவு

ரூ.52.71 லட்சத்தில் 3 குடிநீர் கிணறு அமைக்க முடிவு

திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில், பல ஊராட்சி பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை பிரச்னை, பல ஆண்டுகளாக உள்ளது. இச்சிக்கலுக்கு தீர்வு காண வட்டார வளர்ச்சி நிர்வாகம் தற்போது, மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி, கல்பாக்கம் அடுத்த நெய்குப்பி, செங்கல்பட்டு அடுத்த மணப்பாக்கம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், தலா ஒரு புதிய கிணறை, தலா 17.57 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்க முடிவெடுத்துள்ளது. ஒரு கிணற்றுக்கு திட்ட நிதியாக, தலா 10 லட்சம் ரூபாய், ஒன்றிய பொது நிதியாக, தலா 7.57 லட்சம் ரூபாய் செலவிடப்படும் என, ஒன்றியக்குழு கூட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !