உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அச்சிறுபாக்கம் சிம்ம தீர்த்த குளத்தை சீரமைக்க பக்தர்கள் வேண்டுகோள்

அச்சிறுபாக்கம் சிம்ம தீர்த்த குளத்தை சீரமைக்க பக்தர்கள் வேண்டுகோள்

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் எதிரே உள்ள சிம்ம தீர்த்த குளத்தை, சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அச்சிறுபாக்கத்தில், இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவில் உள்ளது.இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. கோவில் எதிரே, மிகவும் பழமையான சிம்ம தீர்த்த குளம் உள்ளது.தை மாதம் தைப்பூசம் நாளில், தெப்ப உத்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இந்த குளக்கரையைச் சுற்றி செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன.குளக்கரையின் உட்பகுதியில் பதிக்கப்பட்ட கருங்கற்களின் இடைவெளிப் பகுதியில் புற்கள் முளைத்து, கரைப்பகுதி சேதமாகி வருகிறது.மேலும், குளத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட மதிற்சுவரில் பூசப்பட்ட வண்ணம் பொலிவிழந்து உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வுசெய்து செடி, கொடிகளை அகற்றி, குளத்தின் கரைப்பகுதியை சீரமைக்க வேண்டும். மதிற்சுவரில் வண்ணம் பூசி பராமரிக்க வேண்டுமென, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை