உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போதை பொருள் கும்பல் கைது

போதை பொருள் கும்பல் கைது

பம்மல்:அனகாபுத்துார், சீனிவாசபுரம் சந்திப்பு அருகே, நேற்று முன்தினம், சங்கர் நகர் போலீசார், சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அந்த நபர், அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ஹரிபுல் இஸ்லாம், 29, என தெரியவந்தது. அவரிடம் நடத்திய சோதனையில், 10 ஹெராயின் 'கேப்சூல்' இருந்துள்ளது. இதையடுத்து, ஹரிபுல் இஸ்லாமை கைது செய்து, ஹெராயின் கேப்சூல்களை பறிமுதல் செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின்படி, சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த முகமது இம்ரான், 22, என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து, 40 ஹெராயின் கேப்சூல்களை பறிமுதல் செய்தனர். பின், அவர் கொடுத்த தகவலின்படி, மப்பேடு பகுதியைச் சேர்ந்த ரிஷபுல் இஸ்லாம், 30, என்பவரை கைது செய்து, 110 ஹெராயின் கேப்சூல்களை பறிமுதல் செய்தனர். மூவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் ரிஷபுல் இஸ்லாம், அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ஹெராயின் கேப்சூல்களை வாங்கி வந்து பம்மல், அனகாபுத்துார், குன்றத்துார், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூன்று பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ