உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறுமிக்கு பாலியல் தொந்தரவு முதியவருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு முதியவருக்கு 20 ஆண்டு சிறை

சென்னை: கோயம்பேடு அருகே, 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 65 வயது முதியவருக்கு, 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை கோயம்பேடை சேர்ந்த, 5 வயது சிறுமிக்கு, அப்பகுதியை சேர்ந்த கருமலைசாமி என்ற, 65வயது முதியவர், பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது குறித்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரையடுத்து, கோயம்பேடு மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, கருமலைசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'கருமலைசாமி மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது' என, தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு, இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை