உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விட எதிர்பார்ப்பு

பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விட எதிர்பார்ப்பு

செய்யூர்:செய்யூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் விதிமீறலில் ஈடுபட்டு, வருவாய் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சட்டத்திற்கு புறம்பாக மணல் கொள்ளையில் ஈடுபட்ட டிராக்டர், மாட்டுவண்டி, மினி லாரி மற்றும் கார் போன்ற வாகனங்கள் மற்றும் மீனவர்களிடையே மோதல் ஏற்பட காரணமான விசைப் படகுகளை, வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வாகனங்கள், செய்யூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலக கட்டடத்தின் பின்புறம், கடந்த 15 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு உள்ளன.பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டு உள்ளதால், இந்த வாகனங்களின் உதிரி பாகங்கள் சேதமடைகின்றன. வாகனங்கள் வெயிலிலும், மழையிலும் வீணாகி வருகின்றன.மேலும், இந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ள இடத்தில், இரவு நேரத்தில் போதிய மின் விளக்கு வசதி இல்லாததால், வாகனத்தில் உள்ள உதிரி பாகங்களை, மர்ம நபர்கள் திருடிச் செல்ல வாய்ப்பு உள்ளது.எனவே, பறிமுதல் செய்யப்பட்டு ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த வாகனங்களை ஏலம் விட்டு, அரசுக்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ