மேலும் செய்திகள்
பணியாளர்கள் மீது தாக்குதல்
13-Nov-2024
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியில், கொசு ஒழிப்பு பணியாளர்கள் 70 பேருக்கு, 89 நாட்களுக்கு பணிநீட்டிப்பு வழங்கி,நகரசபை அனுமதிவழங்கியது.செங்கல்பட்டு நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இங்கு, கொசு ஒழிப்பு பணி மற்றும் டெங்கு நோய் தடுப்பு பணிகளைசெயல்படுத்த, கொசு ஒழிப்பு பணியாளர்களாக, 70 பேர் தற்காலிகமாகதனியார் நிறுவனம் வாயிலாக பணிபுரிவதற்கு,நகராட்சி நிர்வாகம்அனுமதி வழங்கியது.தனியார் ஒப்பந்ததாரரின் பணிக்காலம், கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. ஒப்பந்த காலத்தை நீட்டித்து தரக்கோரி தனியார் நிறுவனம் நகராட்சியிடம் முறையிட்டது.அதை பரிசீலித்தநகராட்சி நிர்வாகத்தினர், செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல், வரும் நவ., 30 தேதி வரை, 89 நாட்களுக்கு அனுமதி வழங்கினர். மேலும், வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதியிலிருந்து, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி வரை 89 நாட்களுக்கு, தனியார் நிறுவனத்திற்கு, தின கூலி அடிப்படையில் பணிநீட்டிப்பு செய்வதற்கு, 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, நகரசபை கடந்த 11ம் தேதி அனுமதிவழங்கியது.கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்கள், வரி வசூல் உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவர் என, நகராட்சிநிர்வாகம் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
13-Nov-2024