மேலும் செய்திகள்
18 ஆம்னி பஸ்களுக்கு ரூ.1.26 லட்சம் அபராதம்
16-Aug-2025
செங்கல்பட்டு, செங்கல்பட்டில், வரி செலுத்தாமல் இயங்கிய தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு, அபராதம் விதிக்கப்பட்டது. சென்னையிலிருந்து, தென்மாவட்டங்களுக்கு சுதந்திர தின விழா மற்றும் வார விடுமுறையையொட்டி, தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த வாகனங்களை ஆய்வு செய்ய போக்குவரத்து கமிஷனர், செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலருக்கு உத்தரவிட்டார். அதன் பின், செங்கல்பட்டு புறவழிச்சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்களான செங்கல்பட்டு ஜெயலட்சுமி, திருக்கழுக்குன்றம் ஹமித பானு, மதுராந்தகம் ஜெய்கணேஷ் ஆகியோர், நேற்று முன்தினம் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி ஆய்வு செய்தனர். இதில், தனியார் ஆம்னி பேருந்துகள் உள்ளிட்ட 25 வாகனங்கள், வரி செலுத்தாமல் இயங்கியது தெரியவந்தது. இந்த வாகனங்களை சிறை பிடித்து, வரி மற்றும் அபராத கட்டணம் உட்பட, 2.25 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.
16-Aug-2025