மேலும் செய்திகள்
பறவைகளின்றி வெறிச்சோடிய வேடந்தாங்கல் சரணாலயம்
14-Sep-2025
திருப்போரூர்:திருப்போரூர் பகிங்ஹாம் கால்வாயில், உணவு தேடி வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. திருப்போரூர் ஒன்றியத்தில், ஓ.எம்.ஆர்., சாலை, இ.சி.ஆர்., சாலைகளை இணைக்கும் திருப்போரூர் - -நெம்மேலி சாலை, 3 கி.மீ., துாரம் கொண்டது. இந்த சாலைக்கு இடையே பகிங்ஹாம் கால்வாய், உப்பளம் பகுதி உள்ளது. போக்குவரத்திற்காக, பகிங்ஹாம் கால்வாயின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக பகிங்ஹாம் கால்வாய், உப்பளம் மற்றும் சாலையின் இருபுறமும் தண்ணீர் நிரம்பி வருகிறது. இங்கு இறால், நண்டு, மீன்கள் அதிகம் இருக்கும். அதனால், இப்பகுதியில் பல்வேறு பறவைகள் உணவு தேடி வந்து செல்வது வழக்கம். தற்போது, பகிங்ஹாம் கால்வாய் மற்றும் உப்பளம் பகுதியில் தண்ணீர் நிரம்பி வருவதால், இப்பகுதியில் வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கி உள்ளன. குறிப்பாக தற்போது மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் கூழைக்கடா உள்ளிட்ட பறவைகள் வந்து உள்ளன. காலை நேரங்களில், இப்பகுதியில் ஏராளமான பறவைகள் ஒரே இடத்தில் குவிவதால், பார்க்க ரம்மியமாக காட்சியளிக்கிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பறவைகள் கூட்டத்தை பார்த்து ரசிப்பதுடன், தங்கள் மொபைல்போன்களில் படம் பிடித்துச் செல்கின்றனர்.
14-Sep-2025