செங்கை புறநகரில் கனமழை
மறைமலை நகர்:செங்கல்பட்டு புறநகர் பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், ஆப்பூர் மற்றும் சுற்றிய கிராமங்களில் நேற்று மாலை கனமழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை நீருடன் கழிவுநீர் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பெண்கள், பேருந்து நிறுத்தங்களில் காத்திருந்த பயணியர் உள்ளிட்டோர் மழையில் நனைந்தபடி சென்றனர். சிங்கபெருமாள் கோவில், அனுமந்தபுரம் சாலை, ஜி.எஸ்.டி., திருக்கச்சூர் சாலைகளில் ஆறு போல மழைநீர் கழிவுநீரில் பெருக்கெடுத்து ஓடியது. ஆப்பூர் , தாசரி குன்னத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மழை காரணமாக மின்தடை ஏற்பட்டது.