மேலும் செய்திகள்
திருப்பாச்சேத்தியில் எரியாத மின் விளக்கு
11-Oct-2025
திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சி, 6வது வார்டில், பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில், ஒரு ஏக்கர் பரப்பில் அமைந்து உள்ளது. இந்த கோவில் வளாகத்தை ஒட்டி ரேஷன் கடை, கோவில் சார்ந்த வணிக கடைகள், திரையரங்கம், குடியிருப்பு வீடுகள் அமைந்துள்ளன. மேலும், ஓ.எம்.ஆர்., சாலை, இள்ளலுார் சாலை செல்ல, மேற்கண்ட கோவில் வளாகம் வழியாக மக்கள் செல்கின்றனர். இங்கு இரவில், இருள் சூழ்ந்ததால் வெளிச்சம் இல்லாமல் பொதுமக்கள், பக்தர்கள் அச்சத்துடன் சென்று வந்தனர். மேலும், அங்கு இருள் சூழ்ந்து ஒரு பகுதி மறைவான பகுதியாக இருந்ததால், 'குடி'மகன்கள் மது அருந்துதல், கஞ்சா அடித்தல் போன்ற சமூக விரோத செயல்களும் நடந்து வந்தன. எனவே, மேற்கண்ட வளாகப் பகுதியில், உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, இந்த பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு நடந்த உயர் கோபுர மின்விளக்கு துவக்க விழாவில், கவுன்சிலர் லோகநாதன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, பேரூராட்சி தலைவர் தேவராஜ் பங்கேற்று, உயர் கோபுர மின் விளக்கை செயல்பாட்டிற்கு துவக்கி வைத்தார். விழாவில் பங்கேற்ற அப்பகுதி மக்கள், உயர் கோபுர மின்விளக்கு வந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
11-Oct-2025