மேலும் செய்திகள்
கல்லுாரி கனவு நிகழ்ச்சி; கலெக்டர் ஆலோசனை
09-May-2025
செங்கல்பட்டு:செங்கையில், உயர்கல்வி சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, வரும் 28ம் தேதி மாரத்தான் போட்டி நடக்கிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில், பிளஸ் - 2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும், உயர்கல்வி பயில கல்லுாரியில் சேர்க்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.மாவட்டத்தில் கேளம்பாக்கம் தனபாலன் கலை கல்லுாரி, பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகம், காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., மற்றும் படாளம் கற்பக விநாயகா பொறியியல் கல்லுாரிகளில், 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், 7,500 மாணவர்கள் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே உயர்கல்வி சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, வரும் 28ம் தேதி, செங்கல்பட்டில் மாரத்தான் போட்டி நடக்கிறது.இந்த போட்டி, செங்கல்பட்டு சப் - கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கி, கலெக்டர் அலுவலகம் அருகில் நிறைவுபெறும். இந்த போட்டியில் வெற்றிபெறும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக, முதல் பரிசு 5,000 ரூபாய், இரண்டாம் பரிசு 3,000 ரூபாய், மூன்றாம் பரிசு 2,000 ரூபாய் வழங்கப்படும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
09-May-2025