உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிளாம்பாக்கம் முனையம் எதிரில் மாநகர பேருந்துகள் நிற்க வலியுறுத்தல்

கிளாம்பாக்கம் முனையம் எதிரில் மாநகர பேருந்துகள் நிற்க வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி:செங்கல்பட்டு, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்த பேருந்துகளில் ஏரி வெளியூர் செல்லும் பயணியர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வரும்போது, மாநகர பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணியரை இறக்கி செல்லாமல், வண்டலூர் சிக்னல் மற்றும் ஊரப்பாக்கம் ஆகிய, பேருந்து நிறுத்த இடங்களில் இறக்கி செல்கின்றனர். இந்த பேருந்துகளில் பயணம் செய்து, கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணியர் ஊரப்பாக்கம் மற்றும் வண்டலூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, மீண்டும் அவர்கள் கிளாம்பாக்கம் பேருந்து, நிலையத்திற்கு வருவதற்கு சிரமம் அடைகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, மாநகரப் பேருந்துகள் இங்கு நிறுத்தி பயணியரை இறக்கி செல்வதற்கு , உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை