கூடுவாஞ்சேரியில் அறிவுசார் மையம்
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி நகராட்சியில் அறிவுசார் மையம், நேற்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. கூடுவாஞ்சேரி நகராட்சியில், 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகள், 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க தேவையான புத்தகங்கள், 'ஸ்மார்ட் கிளாஸ்', வாசிப்பு அரங்க வசதிகளை உள்ளடக்கிய அறிவுசார் மையம் அமைக்க கோரிக்கை எழுந்தது. அதன்படி, நெல்லிக்குப்ப ம் சாலை, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே, 1.82 கோடி ரூபாய் மதிப்பில், அறிவுசார் மையம் அமைக்கபட்டுள்ளது. இதன் திறப்பு விழா, நேற்று மாலை நடந்தது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பர சன், கலெக்டர் சினேகா, தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, நகராட்சி தலைவர் கார்த்திக் தண்டபாணி உட்பட பலர் பங்கேற்றனர்.