மேலும் செய்திகள்
திண்டுக்கல் கோயில்களில் ஆடிப்பெருக்கு வழிபாடு
04-Aug-2025
சித்தாமூர் ஒழவெட்டி கிராமத்தில் பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. சித்தாமூர் அடுத்த ஒழவெட்டி கிராமத்தில் பாலமுருகன் கோவில் உள்ளது. கோவிலை புணரமைத்து , கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்த கிராமத்தினர் திருப்பணிகளை மேற்கொண்டனர். திருப்பணிகள் முடிந்ததை அடுத்து கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 28ம் தேதி துவங்கியது. தொடர்ந்து கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை நடந்தது. நேற்று காலை 9:55 மணிக்கு கோவில் கோபுர விமானத்திற்கும்,10:00 மணிக்கு மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பாலமுருக சுவாமிக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்கரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காட்டப்பட்டது. ஒழவெட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். * அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் உள்ள மாரியம்மன் கோவில் பாலாலயம் நேற்று நடந்தது. அச்சிறுபாக்கம் மாரியம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. மிகவும் பழமையான இக்கோவில், தாழ்வான பகுதியில் உள்ளதால், ஆண்டுதோறும் பருவ மழை காலங்களில், மழைநீர் தேங்கி வந்தது. இதையடுத் து, உபயதாரர்கள் மற்றும் மக்கள் உபய நிதியின் வாயிலாக, கோவிலை புனரமைத்து கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதன்படி , ஹிந்து சமய அறநிலைத்துறை மூலமாக, கோவில் கர்ப்பகிரகத்தில் உள்ள மாரியம்மன் சிலை பாலஸ்தாபனம் செய்ய நேற்று, காலை மாரியம்மன் கோவிலில் பாலாலயம் செய்ய பூஜைகள் நடந்தன. இதில், அம்பாள், முருகன், விநாயகர், நாகமன்னன், பலிபீடம் ஆகிய ஐந்து சிலைகள் எடுத்து, அருகில் உள்ள மூங்கிலம்மன் கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டது.
04-Aug-2025