உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பூட்டிக் கிடக்கும் மாட்டு பட்டி சுதந்திரமாக திரியும் மாடுகளால் பீதி

பூட்டிக் கிடக்கும் மாட்டு பட்டி சுதந்திரமாக திரியும் மாடுகளால் பீதி

மறைமலைநகர்,:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொண்டமங்கலம் கிராமத்தில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மாட்டு பட்டி அமைக்கப்பட்டு உள்ளது.இதில், 100 நாள் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பெண்கள், மாடுகளுக்கு தீவனம், தண்ணீர் அளித்து பராமரிப்பு பணிகளை செய்து வந்தனர்.தற்போது இந்த மாட்டு பட்டி, பல மாதங்களாக பூட்டியே உள்ளது.இதை பராமரிக்கும் பெண்கள், ஓராண்டில் 100 நாள் மட்டுமே பணி செய்வதால், மற்ற நாட்களில் பட்டியை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, புறநகர் பகுதிகளில் மாடுகள் சுதந்திரமாக சாலையில் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, சாலையில் திரியும் பிடிக்கும் மாடுகளை பராமரிக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து உள்ளாட்சி அதிகாரிகள் கூறியதாவது:செங்கல்பட்டு மாவட்டத்தில், சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க முயலும் போது, மாட்டின் உரிமையாளர்களுக்கு ஆதரவாக உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் பேசுகின்றனர். மாடுகளால் அசம்பாவித சம்பவம் ஏற்படும் போது, உள்ளாட்சி நிர்வாகத்தின் மீது குற்றம்சாட்டுகின்றனர்.மாடுகளை பிடிக்க செல்லும் ஊழியர்களிடம், உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி