லாரி கவிழ்ந்து விபத்து
படப்பை: சேலத்தில் இருந்து சென்னைக்கு, வீடு கட்டுமானத்திற்கு தேவையான மரப்பலகைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. நேற்று அதிகாலை, வாலாஜாபாத் - வண்டலுார் சாலை, படப்பை புது மேம்பாலத்தின் துவக்க பகுதியில் உள்ள தடுப்பு சுவரில் மோதி, லாரி கவிழ்ந்தது. இதில், லாரி பலத்த சேதமடைந்தது. காயமடைந்த ஓட்டுநரை, அப்பகுதியில் இருந்தோர் மீட்டு, தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், லாரியை அகற்றி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.