உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தேவநாத பெருமாள் கோவிலில் வரும் 27ல் மஹா கும்பாபிஷேகம்

தேவநாத பெருமாள் கோவிலில் வரும் 27ல் மஹா கும்பாபிஷேகம்

சிங்கபெருமாள் கோவில், செட்டிபுண்ணியம் தேவநாத பெருமாள் கோவிலில் வரும் 27ல் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.சிங்கபெருமாள் கோவில் அடுத்த செட்டிபுண்ணியம் கிராமத்தில், 700 ஆண்டுகள் பழமையான தேவநாத பெருமாள் - செண்பகவல்லி தாயார், யோக ஹயக்ரீவர் கோவில் உள்ளது.இங்கு ராமர், சீதாதேவிக்கு தனியாக சன்னிதி அமைக்கப்பட்டு உள்ளது. கல்விக் கடவுள் யோக ஹயக்ரீவர் என்பதால் தாம்பரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகின்றனர்.இக்கோவிலில் திருப்பணிகள் செய்ய, 2023ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு, உற்சவரை தனியாக வைத்து பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.தொடர்ந்து, உபயதாரர்கள் நிதி வாயிலாக கட்டுமான பணிகள், கோபுரத்திற்கு வண்ணம் பூசுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.தற்போது பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில், வரும் 25ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை மூன்று நாட்கள், மஹா கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.தற்போது, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை