மேலும் செய்திகள்
ஆண் சடலம் கண்டெடுப்பு
15-Jun-2025
திருப்போரூர்:திருப்போரூர் அருகே நாவலுார் - தாழம்பூர் சாலையை ஒட்டி, தாழம்பூர் பகுதி ஏரி உள்ளது. நேற்று காலை 10:30 மணியளவில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, மேற்கண்ட ஏரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதை அறிந்தனர்.இதையடுத்து அவர்கள், தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்த நபருக்கு 30 வயது இருக்கலாம் என கூறப்படுகிறது. அவர் குறித்த விபரம் தெரியாததால், அவரது புகைப்படத்தை வைத்து விசாரித்து வருகின்றனர்.
15-Jun-2025