உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லை - புதுச்சேரி சாலை சீரமைப்பு

மாமல்லை - புதுச்சேரி சாலை சீரமைப்பு

மாமல்லபுரம், சென்னை - புதுச்சேரி இடையே, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன கட்டுப்பாட்டின் கீழ், முன் கிழக்கு கடற்கரை சாலை இருந்தது. இத்தடத்தில், மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே, 95 கி.மீ.,க்கு தேசிய நெடுஞ்சாலையாக, கடந்த 2018ல் மாற்றப்பட்டது. மாமல்லபுரம் - முகையூர்; முகையூர் - மரக்காணம்; மரக்காணம் - புதுச்சேரி என, மூன்று பிரிவுகளாக, நான்குவழிப் பாதையாக மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டது.மாமல்லபுரம் - முகையூர் பிரிவில், கடந்த 2022 ஜூன் மாதம் பணிகள் துவக்கப்பட்டு, தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முந்தைய இருவழிப்பாதையை பெயர்த்து, விரிவுபடுத்தி, புதிதாக அமைக்கப்படுகிறது.மணமை, குன்னத்துார் உள்ளிட்ட பகுதிகளில், கீழடுக்கிற்கும் கீழாக உள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்தன. அத்தகைய பாதிப்பு பகுதிகளை கண்டறிந்து, மேலடுக்கு அமைக்கும் முன் சீரமைக்க வேண்டும். எனவே, கற்கள் பெயர்ந்த இடங்களில், அவசியத்திற்கேற்ப சாலையை பெயர்த்து, மீண்டும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை