உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பைக் விபத்தில் மெக்கானிக் பலி

பைக் விபத்தில் மெக்கானிக் பலி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு, வேதநாராயணபுரத்தைச் சேர்ந்தவர் மோகன்பாபு,38.புலிப்பாக்கத்தில் உள்ள இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையில், மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு மோகன்பாபு, செங்கல்பட்டு அடுத்த சென்னேரியில் உள்ள தன் கடை உரிமையாளர் வீட்டிற்கு, 'ஹீரோ பேஷன் ப்ரோ' பைக்கில் சென்றார். செங்கல்பட்டு -- திருப்போரூர் சாலையில் வேகமாக சென்ற போது, பாதை நகர் அருகில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 'எய்ச்சர்' சரக்கு வாகனத்தில் பைக் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே மோகன்பாபு உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செங்கல்பட்டு தாலுகா போலீசார், மோகன்பாபு உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை