உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அச்சிறுபாக்கம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு

அச்சிறுபாக்கம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில் சென்னை --- திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம், அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கல்வி பயின்று வருகின்றனர்.அங்கு, கடந்த ஆண்டு, நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 2023 -- 24 ல் 1.28 கோடி ரூபாய் மதிப்பில், 8 வகுப்பறைகள் கொண்ட, புதிய கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கி, நடைபெற்று வந்தன.அதன் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்து நேற்று, திறப்பு விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியரை காயத்ரி வரவேற்றார்.முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் அங்கயற்கன்னி முன்னிலை வகித்தார்.நிகழ்வில், பேரூராட்சி தலைவர், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !