உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாதாள சாக்கடை பணி இடத்தில் அறிவிப்பு பலகைகள் அவசியம்

பாதாள சாக்கடை பணி இடத்தில் அறிவிப்பு பலகைகள் அவசியம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் பகுதிகளில், விபத்து நடைபெறாமல் தடுக்க, அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு நகராட்சியில் ஜே.சி.கே., நகர், நத்தம், மேட்டுத்தெரு, வேதாசலம் நகர், அனுமந்தபுத்தேரி, அழகேசன் நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில், 493 தெருக்கள் உள்ளன. இந்நகரில், பாதாள சாக்கடை திட்டம் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் இருந்தது. பாதாள சாக்கடை அமைக்க கோரி, அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன் பின், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள், 188 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு நகரில் அண்ணா நகர், ஜே.சி.கே., நகர், அழகேசன் நகர், வேதாசலம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக, சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த பகுதி வழியாக குடியிருப்பு மற்றும் அத்தியாவசிய பணிக்கு செல்வோர், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். பாதசாரிகளும் நடந்து செல்லும் போது, சாலைகளில் ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் ஏறி இறங்கும் போது, விபத்துகளில் சிக்குகின்றனர்.இதை தவிர்க்க, பணிகள் நடைபெறும் இடம் மற்றும் மாற்று வழிகளில், அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை