உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சூளை வேலையில் மோதல் ஒருவருக்கு கோடரி அடி

சூளை வேலையில் மோதல் ஒருவருக்கு கோடரி அடி

செய்யூர்:செய்யூரில், சூளை வேலையின் போது கூலித் தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், கோடரியால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயமடைந்தார்.சூணாம்பேடு காலனி முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இனியவன், 35. இவர், சூணாம்பேடு பகுதியைச் சேர்ந்த இன்பரசு, 40, என்பவரிடம், மரங்களை வெட்டி கரி சூளை போடும் கூலி வேலை செய்து வந்தார்.செய்யூர் அடுத்த தேவராஜபுரம் பகுதியில் இனியவன், இன்பரசு, கவியரசு உள்ளிட்ட ஐந்து பேர், கடந்த சில நாட்களாக கருவேல மரங்களை வெட்டி சூளை போடும் வேலையில் ஈடுபட்டு வந்தனர்.நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் சூளை வேலை செய்த போது இனியவனுக்கும், சூணாம்பேடு நடுத்தெருவைச் சேர்ந்த கவியரசுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.இதில் கோபமடைந்த கவியரசு, கையில் வைத்திருந்த மரம் வெட்டும் கோடரியால், இனியவன் தலையில் பலமாக தாக்கிவிட்டு தப்பினார்.இதில் படுகாயமடைந்த இனியவன், மயங்கி கீழே விழுந்தார்.அங்கிருந்தோர் அவரை மீட்டு, செய்யூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து, செய்யூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை