உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வேன் மோதி பெயின்டர் பலி

வேன் மோதி பெயின்டர் பலி

பம்மல்:பம்மலை அடுத்த பொழிச்சலுார், நேரு நகரைச் சேர்ந்தவர் ராஜு, 62; பெயின்டர். இவர், நேற்று முன்தினம் மதியம், பம்மல் பிரதான சாலையில், சரவணா ஷாப்பிங் எதிரே சாலையில் நடந்து சென்றார். அப்போது, அனகாபுத்துாரில் இருந்து பம்மல் நோக்கி சென்ற ஈச்சர் வேன், அவர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த ராஜு சம்பவ இடத்திலேயே பலியானார். அங்கு விரைந்து வந்த போலீசார், ராஜுவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, ஈச்சர் வேன் ஓட்டுநரான, பம்மலை சேர்ந்த அற்புதசெல்வராஜ், 27, என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை