உடைந்த மூடுகால்வாய் சீரமைக்க பாதசாரிகள் கோரிக்கை
கூடுவாஞ்சேரி,கூடுவாஞ்சேரி, ஜி.எஸ்.டி., சாலையில், உடைந்த நிலையிலுள்ள மூடுகால்வாய் மேல் பகுதியை சீரமைக்க வேண்டுமென, பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, மின்வாரிய பேருந்து நிறுத்தம் அருகே, ஜி.எஸ்.டி., சாலையோரம், மூடுகால்வாய் உள்ளது. இந்த மூடுகால்வாயின் மேல்பகுதி, உடைந்த நிலையில் உள்ளது. அணுகு சாலைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சாலை அமைக்கப்படாதால், பாதசாரிகள் இந்த மூடுகால்வாய் மேலே நடந்து செல்கின்றனர். கால்வாயின் மேல்பகுதி உடைந்து, சிதிலமடைந்த நிலையில் உள்ளதால், தினமும் சில பாதசாரிகள் இதில் தடுமாறி விழுந்து காயமடைவது தொடர்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மூடுகால்வாய் மேல்பகுதியை சீரமைக்க வேண்டும். அல்லது, மூடுகால்வாயை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.