உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குன்னத்துார் ஏரியில் மண் தடை செய்ய கலெக்டரிம் மனு

குன்னத்துார் ஏரியில் மண் தடை செய்ய கலெக்டரிம் மனு

செங்கல்பட்டு, குன்னத்துார் ஏரியில் மண் எடுப்பதை தடை செய்ய வேண்டும் என, கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். குன்னத்துார் கிராம மக்கள் அளித்த மனு: குன்னத்துார் ஏரி, நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியில், தனியார் மண் எடுக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், அனுமதி வழங்கியதை விட, 3 அடிக்கு மேல் மண் எடுக்கின்றனர். மழைக்காலத்தில் ஏரியில் தண்ணீர் நிரம்பும். அப்போது, மக்கள் குளிக்கும்போது, ஆழமான பகுதியில் சிக்கி இறக்கும் சூழல் உள்ளது. கால்நடைகளுக்கும் ஆபத்துள்ளது. மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மனுவின் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க, நீர்வளத்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் சினேகா உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை