உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செயற்கை பாறை ஏறும் போட்டி தங்கம் வென்ற பிளஸ் 2 மாணவர்

செயற்கை பாறை ஏறும் போட்டி தங்கம் வென்ற பிளஸ் 2 மாணவர்

தாம்பரம், :மகாராஷ்டிரா மாநிலம், லொனோவாலாவில், திறந்த தேசிய அளவிலான செயற்கை பாறை ஏறுதல் - ஸ்போர்ட்ஸ் கிளெம்பிங் போட்டி நடந்தது.மே 21 முதல் 25ம் தேதி வரை நடந்த போட்டியில் பங்கேற்ற, சென்னையை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஆர்யா பந்தலா தங்க பதக்கம் வென்றார். அவர், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றார். சாதனை படைத்த மாணவரை, தமிழக ஸ்போர்ட்ஸ் கிளெம்பிங் அசோசியேஷன் தலைவர் பாபு, செயலர் திருலோகச்சந்திரன், துணை தலைவர் மகேந்திரன், பயிற்சியாளர் சுதர்சன் உள்ளிட்ட நிர்வாகிகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி